Author Topic: ~ தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? ~  (Read 743 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227010
  • Total likes: 29032
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?




கடை கடையாய் ஏறி, அலைந்து திரிந்து வாங்கி வந்த காட்டன் சேலைகள் கொஞ்ச நாட்களிலேயே சுருங்கி போய் பழைய துணிகள் போல் காட்சி அளிக்கின்றன•

கடைகளில், கடைக்காரர்கள் காட்டும் காட்ட‍ன் சேலைகள் அனை த்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாம் அவர்கள் சுட்டிக் காட்டும் சேலையையே வாங்கிடு வோம். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறும்போதுதான் அது மட்டமான காட்டன் சேலை கள் என்பது நமக்கு அப்போதுதான் தெரியும். கைத்தறி காட்டன் புடவைகள் தான் எப்போதும் சரியான சாய்ஸ்.

காஞ்சிபுரம், பெங்கால், மங்கள கிரி, ராஜஸ்தான், போன்ற காட்ட ன்கள் எப்போதும் ‘பளிச்’லுக்தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில் லை. டார்க் கலர் களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்கா விட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய் விடும்.

அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலா ம். பிரஷ் வாஷ் செய்யக் கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தி னால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.