சுக்கினி (Zucchini) - ஒன்று
வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு
சுக்கினியை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
சுக்கினியுடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
அதில் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்க்கவும்.
சுவையான சுக்கினி கூட்டு தயார். விரும்பினால் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கலாம்.