Author Topic: சுரக்காய் காருலு  (Read 532 times)

Offline kanmani

சுரக்காய் காருலு
« on: May 06, 2013, 11:20:17 PM »
தேவையான பொருட்கள்?


சுரைக்காய்த் துருவல்-2கப்
பொட்டுக்கடலை-1கப்
பச்சரிசி மாவு-1கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை-கால் கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
வெங்காயம்-1
பூண்டு-4
உப்பு-சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு

எப்படி செய்வது?

சுரைக்காய் துருவலை ஒரு துணியில் போட்டு கட்டி நீரை வடியவிடவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக  பொடிக்கவும். கொத்துமல்லி தழையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் வடித்த சுரைக்காய், பொட்டுக்கடலை மாவு,  அரிசிமாவு, அரைத்த பச்சை மிளகாய் விழுது பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து கெட்டியாக பிசைந்து சூடான எண்ணெயில் போட்டு  பொரித்தெடுக்கவும். ஆந்திரா ரெசிபியான இந்த பக்கோடாவை சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். கூடுதல் சுவைக்கு பறங்கிகாய்  துருவல் சேர்க்கலாம். இந்த பக்கோடா ஒரு நாள் மட்டுமே நன்றாக இருக்கும்.