Author Topic: மொச்சை வடை  (Read 503 times)

Offline kanmani

மொச்சை வடை
« on: May 06, 2013, 11:10:46 PM »

    பெரிய மொச்சை - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    உப்பு - சிட்டிகை
    எண்ணெய - பொரிக்க


மொச்சையை 10 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
   

ஊறியதும் அதை மிக்சியில் அரைக்கவும்.
   

அரைத்த கலவையுடன், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசிக்கவும்.
   

அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், சோள மாவு மற்றும் உப்பு போட்டு பிசையவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்த மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
   

சுவையான மொச்சை வடை தயார்.