Author Topic: பாலக்கீரை மசியல்  (Read 697 times)

Offline kanmani

பாலக்கீரை மசியல்
« on: May 06, 2013, 11:09:08 PM »

    பாசிப்பருப்பு - ஒரு கப்
    பாலக்கீரை - ஒரு கட்டு
    சீரகம் - 2 தேக்கரண்டி
    தனியா - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
    பூண்டு - 5 பல்
    உப்பு - தேவையான அளவு
    தக்காளி - ஒன்று (விரும்பினால்)
    கடுகு, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க

 

கீரையை சுத்தம் செய்து உப்பு நீரில் போட்டு நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
   

பருப்பைக் களைந்து, மஞ்சள் தூள், பூண்டு, பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு, மீதமுள்ள சீரகம் போட்டு தாளிக்கவும். (இரும்பு வாணலி (அ) இண்டாலியம் வாணலியில் செய்தால் சுவை நன்றாக இருக்கும்). பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு தனியாவை கையில் வைத்து நசுக்கி சேர்த்து கிளறவும்.
   

தக்காளி நன்கு குழைந்தவுடன் கீரையைப் போட்டு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும்.
   

கீரை நன்கு மசிந்தவுடன், வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பாசிப்பருப்பிற்கு அடிப்பிடிக்கும் தன்மை அதிகம். எனவே அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும். கீரையை மூடிவைக்காமல் திறந்து வைத்து சமைப்பதே சாலச்சிறந்தது. விருப்பத்திற்கேற்ற பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். இதை கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ வைத்துக்கொள்ளலாம்.
   

சுவையான பாசிப்பருப்பு பாலக்கீரை மசியல் தயார். சாதம், சப்பாத்திக்கு ஏற்ற இணை இது.