Author Topic: எக்லெஸ் டேட்ஸ் கேக்  (Read 581 times)

Offline kanmani

எக்லெஸ் டேட்ஸ் கேக்
« on: May 06, 2013, 11:01:38 PM »

    மைதா - ஒரு கப்
    சர்க்கரை - ஒரு கப்
    திக்கான காஃபி டிக்காஷன் - அரை கப்
    பால் - ஒரு கப்
    பேரீச்சம்பழம் - 15
    பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

 

 
   

பேரீச்சம்பழத்தின் உள்ளே இருக்கும் நட்ஸை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா, பேக்கிங் பவுடர் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
   

சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.
   

இந்த கலவையை கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
   

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதாவை தூவி விடவும்.
   

அதில் பாதி அளவிற்கு கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.
   

பின் ஒரு அலுமினிய பாத்திரத்தில் மணல் போட்டு 25 நிமிடங்களுக்கு நன்கு சூடேற்றவும்.
   

சூடேறியதும் அதில் மாவு கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 30 - 40 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
   

கத்தியை உள்ளே விட்டு, வெந்துவிட்டதா என்று பார்த்து இறக்கவும்.
   

காஃபி மணத்துடன் சுவையான, ஈசியான எக்லெஸ் டேட்ஸ் கேக் தயார். இதை ஃபிரிட்ஜில் வைத்து கூலாக சாப்பிடலாம். மிக அருமையாக இருக்கும்.

 

இதை அலுமினிய பாத்திரத்தில் மட்டும் செய்யவேண்டும். இதில் முட்டை சேர்க்கவில்லை அதனால் ரொம்ப பொங்கி பெரிதாக வராது.