Author Topic: வாழைப்பழ ஸ்மூத்தி  (Read 502 times)

Offline kanmani

வாழைப்பழ ஸ்மூத்தி
« on: May 06, 2013, 10:41:03 PM »
தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1 கப் (நறுக்கியது)
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
வென்னிலா தயிர் - 2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
முந்திரி - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிளெண்டரில்/மிக்ஸியில் தேன், வாழைப்பழம், முந்திரி, தயிர், ஐஸ் கட்டிகள் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!!