குடமிளகாய் நறுக்கியது -கால் கப்
மல்லித்தழை நறுக்கியது-கால் கப்
புதினா இலை-கால் கப்
கறிவேப்பிலை-கால் கப்
நறுக்கிய வெங்காயம் கால் கப்
நறுக்கிய தக்காளி-கால் கப்
கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
காய்ந்தமிளகாய்-2
பச்சைமிளகாய்-1
பூண்டுப்பொடி-1டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
எண்ணைய் வதக்க
வாணலியில் எண்ணை ஊற்றி கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு,மிளகாய் போட்டு வதக்கி எடுக்கவும்
பின் மீதி எண்ணையில் வெங்காயம் ,தக்காளி,குடமிளகாய்,மல்லித்தழை,
புதினா,கறிவேப்பிலைஎல்லாம் ஓன்றன்பின் ஓன்றாக போட்டு வதக்கவும்.அதோடு பூண்டு பொடி சேர்க்கவும்.
முதலில்பருப்பு மிளகாய் போட்டு ஒரு சுற்று சுற்றி பின் வதக்கியமீதி கலவையை போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
Note:
பூண்டுபொடிக்கு பதில் மூன்று பூண்டு பல் சேர்க்கலாம்.