என்னென்ன தேவை?
தாமரைத்தண்டு -5
ஜவ்வரிசி- கால் கப்
வெங்காயத்தாள்
கடலைமாவு-1கப்
பச்சைமிளகாய்-4
சீரகம்-சிறிதளவு
துருவிய இஞ்சி-கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்-2டீஸ்பூன்
உப்பு-சிறிதளவு
எண்ணெய்-தேவையான அளவு
எப்படி செய்வது?
ஜவ்வரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். தாமரைத் தண்டின் மேல் தோலை சீவி பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசி, நறுக்கிய தாமரைத்தண்டு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயத்தாள், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், கரம் மசாலாத்தூள் சேர்த்து கெட்டியாக பிசையவும். இந்த கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும். சில்லி சாஸ் சேர்த்து சூடாக பரிமாறவும். நார்சத்து அதிகம் நிறைந்த பக்கோடா இது.