என்னென்ன தேவை?
உதிர்த்த மக்காச்சோளம் -1கப்
நறுக்கிய வெங்காயம்-1கப்
ஸ்வீட் கார்ன், வெள்ளைச்சோளம்- தேவையானஅளவு
பச்சரிசி
சுத்தம் செய்த புதினா- கால் கப்
பச்சை மிளகாய்- 4
உப்பு-சிறிதளவு
எண்ணெய்- தேவையானஅளவு
எப்படி செய்வது?
பச்சரிசி வெள்ளைச்சோளம் ஆகியவற்றை தனிதனியாக ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். இவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு உதிர்த்த மக்காச்சோளம், ஸ்வீட்கார்ன், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். ஸ்வீட் கார்ன் சேர்க்காமல் செய்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கலாம். கூடுதல் சுவைக்கு பூண்டு பல்லை நறுக்கி சேர்க்கலாம்.