Author Topic: டொமேட்டோ ப்ரைடு ரைஸ்  (Read 925 times)

Offline kanmani

டொமேட்டோ ப்ரைடு ரைஸ்
« on: April 27, 2013, 01:12:37 AM »


    சாதம் - 2 கப்
    தக்காளி - 4
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 5 பல்
    பச்சை மிளகாய் - 3
    முட்டை - 2
    மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    க்ரீன் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவைக்கு

 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, பச்சை மிளகாயை நசுக்கி வைக்கவும். முட்டையை தனியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
   

பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
   

சுருள வதங்கியதும் அதனுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை கொத்தி சேர்க்கவும்.
   

பிறகு சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
   

மிளகுத் தூள் தூவி சூடாக பரிமாறவும்.