Author Topic: ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்  (Read 707 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 7
பால் - 1 கப்
ஐஸ் க்ரீம் - 1 ஸ்கூப் (வென்னிலா/ஸ்ட்ராபெர்ரி)
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள இலைகளை நீக்கி, அதனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, பால், ஐஸ் க்ரீம், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு நைஸாக அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி!!!