என்னென்ன தேவை?
கமலா ஆரஞ்சு சாறு - ஒன்றரை கப்,
கன்டென்ஸ்டு மில்க் - முக்கால் டின்,
கிரீம் - ஒன்றரை கப்,
சர்க்கரை - அரை கப்,
ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி - அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
கமலா ஆரஞ்சு சாற்றில், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மீண்டும் கலக்கவும். பிறகு கிரீம் சேர்த்து, அது வெண்ணெயாகாதபடி கலக்கவும். பிறகு கலவையை மூடி போட்ட ஐஸ்கிரீம் பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். அது பாதி கெட்டியாகும் வரை வைத்திருந்து, வெளியே எடுத்து மீண்டும் ஒரு முறை அடித்துக் கலக்கி, மறுபடி ஃப்ரீசரில் வைக்கவும். முழுவதும் கெட்டியானதும் எடுத்து, ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். இதே முறையில் மாம்பழம், சீத்தாப்பழம், வாழைப்பழம், அன்னாசி, மிக்சட் பழங்கள் என விதம் விதமாக ஐஸ்கிரீம் செய்யலாம்.