பீட்ரூட் - 1/2
பால் - 3 கப்
ஆப்பில் - 1
சர்க்கரை - 2 ஸ்பூன்
கன்டென்ஸ்ட் மில்க் - 4 ஸ்பூன்
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி 1 கப் பால் சேர்த்து வேக வைக்கவும்
மீதம் 2 கப் பாலை குளிர வைக்கவும்.பின்பு வெந்து ஆறிய பீட்ரூட்டையும் நறுக்கிய ஆப்பிளும்,சர்க்கரையும்,கன்டென்ஸ்ட் மில்கும் சேர்த்து ப்லென்டரில் நன்கு அடித்துக் கொள்ளவும்
பின்பு அதனை பெரிய கண் வடிகட்டியில் வடிகட்டவும்
அடர் ரோஸ் நிறத்தில் அழகான மற்றும் சுவையான ஆப்பிள் ஷேக் ரெடி
Note:
டிவியில் காண்பித்தார்கள்..அதன் அழகுக்கே உடனே செய்து பார்த்து விட்டேன்..பீட்ரூட்டின் சுவையே தெரியாது.விரும்பினால் 1 ஸ்கூப் ஐஸ்க்ரீம் மேலே வைத்து பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும்