Author Topic: சில்லி சீஸ் சாண்ட்விச்  (Read 588 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

பிரட் - 1 பாக்கெட்
வெண்ணெய் - தேவையான அளவு
குடைமிளகாய் - 2
வெங்காயம் - 2
புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - 3 கட்டிகள் (துருவியது)
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பௌலில் ஒன்றாக போட்டு, அதில் புதினா சட்னி, உப்பு மற்றும் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பிரட் துண்டின் மேல் வெண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கலந்து வைத்துள்ள கலவையை வைத்து, மீண்டும் அதன் மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட் துண்டை வைத்து மூடி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானது, அதில் பிரட் துண்டுகளை ஒரு 5 நிமிடம் முன்னும் பின்னும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

இப்போது சுவையான சில்லி சீஸ் சாண்ட்விச் ரெடி!!!