Author Topic: ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் இயற்கைப் பொருட்கள்!!!  (Read 837 times)

Offline kanmani

சருமத்தின் அழகைக் கெடுக்கும் பிரச்சனைகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கும் பொதுவான ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க். இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க் ஒவ்வொருவரின் நிறத்திற்கும் வேறுபடும். மேலும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை பிரசவம், திடீரென உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது, உடல் நலக் குறைபாடு போன்றவற்றால் ஏற்படும்.

 நமது சருமத்தில் பல அடுக்குகள் உள்ளன. அத்தகைய அடுக்குகளில் நடுவில் இருக்கும் அடுக்கில் ஏற்படும் விரிசல் உண்டாவதால் வருபவை தான் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள். இந்த விரிசலை மேற்புறத்தில் உள்ள தோலானது மெல்லியதாக இருப்பதால், வெளிப்படையாக காட்டுகிறது. எனவே இதனை வெளிக்காட்டாமல் மறைப்பதற்கு, சருமத்தில் போதிய ஈரப்பசை இருக்க வேண்டும்.

மேலும் இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க முடியும். அதற்காக நிறைய கெமிக்கல் கலந்த பொருட்கள் விற்றாலும், அவை சரியான பலனைத் தருவதில்லை. ஆனால் அவற்றிற்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களான இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினாலே எளிதில் மறைத்துவிடலாம். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு

 எலுமிச்சை ஸ்ட்ரெட்ச் மார்க் மற்றும் தழும்புகளை போக்குவதற்கு பயன்படும் ஒரு சிறந்த பொருள். ஏனெனில் இதில் கிளைகோலிக் ஆசிட் மற்றும் ஹைட்ராக்ஸைடு ஆசிட் போன்ற தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கும் பொருள் உள்ளது. மேலும் இவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, பழுதடைந்த செல்களையும் புதுபிக்கும். ஆகவே எலுமிச்சை சாற்றைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வர எளிதில் மறைக்கலாம்.

கேரட்

கேரட்டை வேக வைத்து, அதனை நன்கு மசித்த, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடங்களில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் சீக்கிரம் மறைந்துவிடும்.

திராட்சை

திராட்சையின் சாறு ஒரு சிறந்த மாய்ச்சுரைசர். எனவே திராட்சையை அரைத்து, அதனை சாற்றை மார்க் உள்ள இடத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெப்பான நீரில் கழுவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் நீங்கி, சருமமும் மென்மையாகும்.

கொக்கோ வெண்ணெய்

ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்கப் பயன்படும் பொருட்களில் மிகவும் பிரபலமானது கொக்கோ வெண்ணெய் தான். ஏனெனில் கொக்கோ வெண்ணெய் சருமத்தில் எளிதில் ஊடுருவி, பாதிப்படைந்த பகுதிக்கு சென்று, அதனை சரிசெய்வதில் சிறந்தது. எனவே இதனை தினமும் மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து வந்தால், மறைந்துவிடும்.


பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் புதுபிக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே இந்த பாதாம் எண்ணெயை தொடர்ந்து தடவி மசாஜ் செய்து வர, நம்பமுடியாத நன்மையை பெற முடியும்.

கற்றாழை

சருமத்தில் ஈரப்பசையை அதிகரிக்கவும், வறட்சியைப் போக்கவும் கற்றாழை மிகவும் சிறந்த பொருள். அதிலும் இந்த கற்றாழையை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், தினமும் 3 முறை தடவி வந்தால், மார்க்குகள் மறைவதை நன்கு காணலாம்.

கோதுமை எண்ணெய்

கோதுமை எண்ணெயிலும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கும் தன்மை உள்ளது. அதிலும் இதனை மார்க்குகள் ஏற்படும் ஆரம்ப காலத்தில் தடவி மசாஜ் செய்தால், சீக்கிரம் போக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்

வாசனை எண்ணெய்களுள் ஒன்றான லாவெண்டர் எண்ணெயை, தழும்பு உள்ள இடத்திலும், ஸ்ட்ரெட்ச் மார்க் இருக்கும் இடத்திலும் தடவி வந்தால், மறையும்.

ஆலிவ் ஆயில்

 உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் எண்ணெயான ஆலிவ் ஆயிலை, கர்ப்பிணிகள் தடவி வந்தால், அதில் உள்ள மாய்ச்சுரைசிங் தன்மை, சருமத்தை பொலிவோடும், மார்க்குகள் இல்லாமலும் வைக்கும்.

தண்ணீர்

எல்லாவற்றிற்கும் மேலாக தண்ணீர் குடிப்பது தான் மிகவும் முக்கியமானது. உடலில் வறட்சி இல்லாமல் இருந்தாலேயே, சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். மேலும் அதிகப்படியான தண்ணீர் குடிப்பது, சருமத்தின் நெகிழ்வு தன்மையை அதிகரித்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதை தடுக்கும்.