Author Topic: வெஜிடபுள் மக்கன்வாலா  (Read 589 times)

Offline kanmani

வெஜிடபுள் மக்கன்வாலா
« on: April 06, 2013, 11:46:37 AM »
என்னென்ன தேவை?
கேரட், பீன்ஸ் (நீளமாக நறுக்கி,
ஆவியில் வெந்தது) - 2 கப்,
நீளமாக நறுக்கிய குடமிளகாய் - 1 கப்,
வெந்த பட்டாணி - 1 கப்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
மெலிதாக நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 8,
நீளமாக நறுக்கிய இஞ்சி -
1 டீஸ்பூன், வெண்ணெய் அல்லது எண்ணெய் - வதக்குவதற்கு,
உப்பு - தேவையான அளவு,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.

சாஸ் தயாரிக்க...

மைதா - 1 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்,
பால் - 1 கப், தக்காளி சாஸ் - 1 கப்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெயை சூடாக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, லேசான பிரவுன் நிறத்துக்கு வரும் வரை வதக்கவும். தனியா தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து வேக வைத்த காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும். சாஸ் தயாரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் கொட்டி, நன்கு கலந்து, அதையும் காய்கறிக் கலவையில் சேர்க்கவும். கலவை கெட்டியாகும் வரை கிளறி, இறக்கிப் பரிமாறவும்.