என்னென்ன தேவை ?
பச்சரிசி - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 100 கிராம்,
தயிர் - 50 மில்லி,
எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
சிறியவெங்காயம் - 5,
பூண்டு - 3 பல்,
தக்காளி - 1,
உப்பு - தேவையான அளவு.
எப்படி செய்வது ?
அரிசியை களைந்து வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயை இரண்டாக வகுந்து, லேசாக எண்ணெய் ஊற்றி வதக்குங்கள். அதைத் தயிரோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை மிதமான தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்குங்கள். நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரிசியைப் போட்டு கிளறி மூடிவிடுங்கள். 15 நிமிடத்தில் மிரப்பக்காய் சாதம் ரெடி!