Author Topic: வெள்ளைப் பணியாரம்  (Read 639 times)

Offline kanmani

வெள்ளைப் பணியாரம்
« on: April 06, 2013, 11:36:26 AM »
என்னென்ன தேவை?
மாவு அரிசி (பச்சரிசி) - 200 கிராம், உளுந்து - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.

எப்படிச் செய்வது?
அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, வெண்ணெய் மாதிரி அரைக்கவும். உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். ஏந்தலான ஒரு கடாயில் கொஞ்சமாக எண்ணெய் காய வைத்து, ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து, எண்ணெய்க்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தணித்து ஊற்றவும். அதன் மேல் எண்ணெயைத் தூவி விட்டால், பணியாரம் உப்பி, மேலெழும்பி வரும். திருப்பி விட்டு, ஒரு நிமிஷம் கழித்து எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும். இந்தப் பணியாரத்துக்கு மாவு புளிக்கக் கூடாது