ப்ரெட் துண்டுகள் - 5
கேரட், கோஸ், குடை மிளகாய் - ஒரு கப்
வெங்காயம் - பாதி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
கெட்ச்சப் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், நறுக்கிய காய்கறி கலவை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பின் அதில் சோயா சாஸ், கெட்ச்சப் விட்டு பிரட்டி வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளில் சிறிது தண்ணீர் விட்டு பிழிந்து வைக்கவும்.
ப்ரெட்டின் ஒரு ஓரத்தில் காய்கறி கலவையை வைக்கவும்.
மற்றொரு ஓரத்தால் அதை மூடி தவாவில் சிறிது எண்ணெய் விட்டு ரோஸ்ட் செய்யவும்.
சுவையான ப்ரெட் சாண்ட்விச் ரெடி.