Author Topic: இட்லி டோக்ளா  (Read 621 times)

Offline kanmani

இட்லி டோக்ளா
« on: April 02, 2013, 09:43:05 PM »
 

    இட்லி - 4
    பீன்ஸ் - 5
    கேரட் - 1
    தயிர் - கால் கப்
    துருவிய இஞ்சி - கால் தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    கடுகு - கால் தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லித் தழை - 3 கொத்து
    உப்பு - கால் தேக்கரண்டி
    எண்ணெய் - அரை மேசைக்கரண்டி

 
கேரட்டை வட்டமாக நறுக்கவும். பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
   

அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்.
   

இட்லியை உதிர்த்து, அதனுடன் தயிர் சேர்க்கவும்.
   

பின் வதக்கி எடுத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
   

ஒரு வட்டமான தட்டில் பிசைந்த இட்லிக் கலவையை சமமாக பரப்பி வைக்கவும்.
   

பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் டோக்ளா தயார் செய்த தட்டை வைத்து மூடி 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
   

வெந்ததும் அதில் இட்லிப் பொடி தூவி பரிமாறவும்.
   

எளிதில் செய்யக்கூடிய இட்லி டோக்ளா தயார்.