Author Topic: மசாலா கச்சோரி  (Read 564 times)

Offline kanmani

மசாலா கச்சோரி
« on: March 30, 2013, 09:03:10 AM »
பண்டிகை காலங்களில் கச்சோரியானது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும். அதிலும் ஹோலி பண்டிகையில் போது, வட இந்தியாவில் தவறாமல் செய்யும் தின்பண்டங்களில் இதுவிம் ஒன்று. இது நிறைய பேருக்கு மிகவும் விருப்பமானது. பொதுவாக கச்சோரியானது போண்டா போன்று இருக்கும். மேலும் கச்சோரிகளில் நிறைய உள்ளன.

இப்போது அவற்றில் ஒன்றான மசாலா கச்சோரியை எளிதான முறையில் எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, மாலை வேளையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய பௌலில் மைதா, தயிர், உப்பு மற்றும் ஓமம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, ஒரு ஈரமான துணி கொண்டு சுற்றி 1 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், மாங்காய் பொடி, மல்லி தூள், கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் கரம் மசாலா மற்றும் புதினா சேர்த்து, மசாலா பொன்னிறமாக வரும் போது இறக்கி, ஒரு தட்டில் போட்டு, குளிரை வைக்க வேண்டும்.

 அடுத்து அந்த பூரி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வட்டமாக தேய்த்து, அதன் நடுவே, அந்த மசாலாவை வைத்து, மூட வேண்டும்.

 இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பூரி மாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான மசால கச்சோரி ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.