Author Topic: இது தேவதையின் காலம்  (Read 707 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இது தேவதையின் காலம்
« on: January 03, 2013, 07:04:02 PM »
ந‌ட்ச‌த்திர‌ம் மின்னும்
என் க‌ருஞ்சாம்ப‌ல் குள‌த்தில்
வரைந்தேன் உன் முக‌ம்
மஞ்சலொளி பாரித்து
சிறு பாற்கடலாய் பரிணமித்தது குளம்


***


துரித உரையாடலொன்றின் இறுதியில்
ஒரு தூசு புன்னகையை உதறி சென்றாய்
அதன் நுண்தொடுகையின் கூச்சத்தில்
சிலிர்த்ததென் நிச்சலன குளம்
க‌ல‌ங்கி மேல்ழுந்த‌ அடிம‌ண்ணின்
ப‌ர‌ப்பெங்கும் ப‌ட‌ர்ந்திருக்கிற‌து
உன் புன்ன‌கையின் குளிர்ச்சி


***


நீள் நெடும்பரப்பென விரிந்திருக்கிறது
என் கருஞ்சம்பல் குளம்
அதில் தேவதையின் சிறகிலிருந்து
நழுவிய இறகாய் உதிர்கின்ற‌ன‌
உன் பால்மஞ்சல் நிற நினைவுக‌ள்


***


நீ வ‌ந்து நீந்த‌ துவ‌ங்கிய‌
க‌ண‌த்தின் முதல்நொடியில்
இது மாறி போன‌து
ஒரு தேவ‌தை குள‌மாய்



***


மேடுப‌ள்ள‌ம‌ற்ற‌ ஒரு க‌ண்ணாடிவெளியென
மௌனித்திருந்த‌து என் குள‌ம்
உன் பார்வையின் ஒற்றை நிழல் உதிர்ந்து
வ‌ட்ட‌ வ‌ட்ட‌ அலைகள் எழுவதற்கு
முந்தைய‌ க‌ண‌ம் வ‌ரை


வட்ட அலை புரளுமென் குளத்தில்
மிதக்கவிடுகிறேன் உன் மௌனத்தை
மொட்டென குமிழ்ந்து உரக்க வெடிகிறது
நீ பேசாத வார்த்தைகளை


***


என் குள‌த்தில் அமிழ்ந்தெழுந்து
ந‌ட‌க்கும் நினைவுக‌ள்
உகுக்கும் ஏக்க‌த்தின் ஈர‌ங்க‌ளில்
குளிர்ந்து க‌ன‌மாகிற‌து
என் மூச்சுக் காற்று


***


சினப்பேச்சுக்களின் ஊடே
ஒரு பாலையின் தனிமையை
மனதின் கரங்களில் திணிக்கும்
உன் வெளிறிய முறுவல்களை குளிர்த்தி
இக்குளத்தின் அடியில் பாதுக்காத்து வைத்திருக்கிறேன்
ஒரு பனிகாலத்தின் குளுமையுடன்
உனக்கு திருப்பி தர‌


தொடரும்...
« Last Edit: January 03, 2013, 07:10:49 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: இது தேவதையின் காலம்
« Reply #1 on: January 03, 2013, 08:07:30 PM »
இப்போ என்னதான் சொல்ல வாறீங்க ... ::) ::) ::) ::)?  உங்க குளம் வத்தவே வத்தாதா ... இந்திக்கே தண்ணீர் பிரச்சனை  அதை தீர்கலாம்ல .. :o
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: இது தேவதையின் காலம்
« Reply #2 on: January 03, 2013, 09:14:25 PM »
 :D ;Dennamo solla varinga  :-[aanal ennakuthan puriyalai pola nalla irruku padicha varai
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ! SabriNa !

Re: இது தேவதையின் காலம்
« Reply #3 on: January 05, 2013, 12:45:05 PM »
நீ வ‌ந்து நீந்த‌ துவ‌ங்கிய‌
க‌ண‌த்தின் முதல்நொடியில்
இது மாறி போன‌து
ஒரு தேவ‌தை குள‌மாய்


ennama imagine pannirukeenga....

superb lines...!!! ungal payanam thodaratum....!!


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: இது தேவதையின் காலம்
« Reply #4 on: April 01, 2013, 04:06:40 PM »
pinnoottamittam anaivarukkum nandri
அன்புடன் ஆதி