பீட்ரூட் ரெய்த்தா
என்னென்ன தேவை?
பீட்ரூட் - 2,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
புளி - கொட்டைப்பாக்களவு,
கடுகு, கறிவேப்பிலை,
எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டை தோல் நீக்கி வேக வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததில் கொட்டிக் கலக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.