Author Topic: பம்பாய் சட்னி  (Read 841 times)

Offline kanmani

பம்பாய் சட்னி
« on: March 15, 2013, 12:54:59 AM »


    வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
    தக்காளி - ஒன்று (நடுத்தர அளவு)
    கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
    இஞ்சி - ஒரு துண்டு
    பச்சை மிளகாய் - 4
    சோம்பு - அரை மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - தேவையான அளவு
    இட்லி மாவு - 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
    கொத்தமல்லித் தழை
    உப்பு - தேவையான அளவு
    கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
    வடைக்கு:
    கடலைப்பருப்பு - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    மிளகாய் வற்றல் - 4
    கறிவேப்பிலை
    உப்பு

 

 
   

கடலை மாவில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, இட்லி மாவு சேர்த்து கலந்து வைக்கவும். இஞ்சி, சோம்பு, 2 பச்சை மிளகாயை கொர கொரப்பாக அரைத்து கடலை மாவுடன் கலந்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். 2 பச்சை மிளகாயை கீறி வைக்கவும். வடைக்கு கடலைப்பருப்பை ஊற வைத்து மிளகாய் வற்றல் சேர்த்து வடை மாவாக அரைக்கவும். அரைத்த கடலைப் பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
   

கடலைப்பருப்பு கலவையில் வடைகள் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
   

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
   

பிறகு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வதங்கியதும் கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கரைசலை ஊற்றி மூடி வைக்கவும்.
   

கொதி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இதனுடன் எடுத்து வைத்துள்ள மசால் வடைகளைப் போட்டு ஊற வைத்து இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

 

 மசால் வடை செய்து மீதம் இருந்தால் இது போல் செய்யலாம். நான் இதற்காகவே மசால் வடை செய்தேன். குறிப்பில் சோம்பு சேர்த்து இருந்ததால் நான் வடையில் மசால் எதுவும் சேர்க்காமல் செய்திருக்கிறேன். இட்லி மாவும் சேர்க்கவில்லை.