ப்ரெட் - 3 துண்டுகள்
முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறு துண்டுக்களாக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் ப்ரெட் துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றவும்.
பிறகு நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
எளிதாகச் செய்யக்கூடிய் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற ப்ரெட் பொரியல் தயார்.