(ஒரு பெண் தான் காதலிக்காத மற்றும் அவள் வெறுத்த ஒருவனை , மணக்கும் வேளையில் அவன் அன்பை புரிந்து கொண்டு சொல்லும்
கவிதை) :
நான் தேடிய ராஜகுமாரன் நீ அல்ல.,
ஆனால் உன் பண்பு நான் தேடிய ராஜகுமாரனிலும் உயர்ந்தது ..
நான் உனக்காக தவம் இருக்கவில்லை.,
ஆனால் இனி உன் மகிழ்ச்சிக்காக மட்டுமே தவம் இருப்பேன்..
உன்னை பார்த்ததும் காதல் மலரவில்லை.,
ஆனால் இனி நீ பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் என்னுள் காதல் மலரும்..
நான் உன் காதலை உணர்ந்த இந்த தருணம்.,
என்னை நான் வெறுக்கிறேன் அன்று உன்னை வெறுததற்கு..
உன்னை புரிந்து கொண்ட இந்த தருணம்.,
"நான் உன்னை நேசிக்றேன்., நேசிப்பேன் என்றென்றும்.."
...Written By.,
...PiNkY...