Author Topic: பட்டர்நட் ஸ்குவாஷ் சட்னி  (Read 754 times)

Offline kanmani



    பட்டர்நட் ஸ்குவாஷ் - கால் பாகம்
    கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
    உளுந்து - 2 தேக்கரண்டி
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    புளி - நெல்லியளவு
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப)
    சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

 

தேவையானவற்றை எடுத்து வைக்கவும். பட்டர்நட் ஸ்குவாஷ் காயை தோல் சீவி, விதை நீக்கி துண்டுகளாக்கவும்.
   

கடாயில் எண்ணெய் விட்டு தாளித்து, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, பச்சை மிளகாய், பட்டர்நட் ஸ்குவாஷ் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். புளி சேர்த்து ஆற விடவும்.
   

ஆறியவுடன் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
   

சுவையான பட்டர்நட் ஸ்குவாஷ் சட்னி தயார்.