Author Topic: தித்திக்கும்... சுரைக்காய் கீர்  (Read 648 times)

Offline kanmani

பொதுவாக கீர் தயாரிக்கும் போது, அதில் சாதத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவற்றில் நிறைய கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் இருக்கும். கீரில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சுரைக்காய் வைத்து செய்யப்படும் கீர். இந்த வகையான கீரில் கொழுப்புக்களே இருக்காது. இதில் நிறைய வைட்டமின்கள் தான் இருக்கும்.

மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, இதனை செய்து தரும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்தலாம். சரி, இப்போது அந்த சுரைக்காயை வைத்து செய்யப்படும் கீரின் செய்முறைப் பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 500 கிராம்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா - 10
முந்திரி - 10
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
எசன்ஸ் - 1 டீஸ்பூன் (விருப்பமான ஏதாவது ஒரு எசன்ஸ்)

 செய்முறை:

முதலில் சுரைக்காயின் தோலை சீவி, துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துருவிய சுரைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்துவிட வேண்டும்.

 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பிஸ்தா போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள சுரைக்காயை, நெய்யில் போட்டு 3-4 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து, 1 லிட்டர் பாலை 3/4 லட்டராக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

 பின் வதக்கி வைத்துள்ள சுரைக்காயை பாலுடன் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

 அடுத்து சர்க்கரை சேர்த்து, 3-4 நிமிடம் சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

இறுதியில் ஏலக்காய் பொடியை போட்டு, எசன்ஸ் ஊற்றி இறக்கி, வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிஸ்தாவை போட்டு அலங்கரித்து பரிமாற வேண்டும்.

இப்போது தித்திக்கும் சுரைக்காய் கீர் ரெடி!!!