Author Topic: மைசூர் போண்டா  (Read 626 times)

Offline kanmani

மைசூர் போண்டா
« on: March 09, 2013, 11:41:08 AM »
போண்டாவில் நிறைய உள்ளன. இவை அனைத்தும் விருப்பத்தை பொறுத்ததே ஆகும். மேலும் போண்டாவில் மிகவும் பிரபலமானது மைசூர் போண்டா. இத்தகைய போண்டா செய்வது மிகவும் எளிது. அதிலும் இதனை வீட்டிலேயே மாலை வேளையில் செய்து சாப்பிடலாம்.

இப்போது அந்த மைசூர் போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 இன்ச்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
 தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் கிரைண்டரில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி, நைஸாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போட்டு கலந்து கொள்ளவும். அடுத்து அதில் மிளகு, சீரகம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை எலுமிச்சை அளவு எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

 இப்போது சுவையான மைசூர் போண்டா ரெடி!!!

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.