Author Topic: மலபார் ஸ்டைல்: நெய் சாதம்  (Read 666 times)

Offline kanmani

பொதுவாக நெய் சாதம் என்றால், சாதத்தில் நெய்யை ஊற்றி கிளறி கொடுப்போம். ஆனால் இந்த நெய் சாதத்திலேயே சில வகைகள் உள்ளன. அதுவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு மாறுபடும். மேலும் நெய் சாதம் ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

சரி, இப்போது அந்த வகையில் கேரளாவில் உள்ள மலபார் ஸ்டைலில் எப்படி நெய் சாதத்தை செய்வது என்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

 பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
முந்திரி - 5
உலர் திராட்சை - 5
பாதாம் - 5
உப்பு - தேவையான அளவு

 செய்முறை: முதலில் அரிசியைக் கழுவி, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் போட்டு 2 நிமிடம் வறுத்து, அதனை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்பு அதே நெய்யில், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை போட்டு வதக்க வேண்டும்.

 அடுத்து, நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி, பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு 2 நிமிடம் வதக்கி, கேரட் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

 பிறகு விசில் போனதும் திறந்து, அதன் மேல் வறுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

இப்போது மலபார் ஸ்டைல் நெய் சாதம் ரெடி!!!