Author Topic: மைசூர் அடை  (Read 802 times)

Offline kanmani

மைசூர் அடை
« on: March 02, 2013, 11:25:30 AM »


    பச்சரிசி மாவு - 2 கப்
    பச்சை மொச்சைப் பயறு - 1/2 கப்
    தேங்காய்ப்பூ - 1 கப்
    பச்சை மிளகாய் - 6
    பெருங்காயப் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - தேவையான் அளவு

 
    பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும்.
    பச்சரிசி மாவில், அரைத்த விழுது, தேங்காய்ப் பூ, சீரகம், இவற்றை சேர்க்கவும்.
    பச்சை மொச்சைப் பயறை குழைய வேக வைக்கவும்.
    வெந்த பயறை, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.
    இதையும் மாவில் சேர்க்கவும்.
    கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்தில் கலக்கவும்.
    அடைக் கல்லை அடுப்பில் காய வைத்து, இந்த மாவை ஊற்றி, நெய் சேர்த்து, வேக வைக்கவும்.
    சர்க்கரை, தேங்காய் சட்னியுடன் சேர்த்து, பரிமாறவும்.