Author Topic: பச்சை மாங்காய் சாலட்  (Read 616 times)

Offline kanmani

பச்சை மாங்காய் சாலட்
« on: March 02, 2013, 10:43:35 AM »
கோடைகாலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பார்த்ததும் வாயில் எச்சில் ஊற வைக்கும் மாங்காய் சீசனும் ஆரம்பித்துவிட்டது. மாங்காய்க்கு என்றே தனிப் பிரியர்கள் உள்ளனர். அவர்கள் மாங்காய் எவ்வளவு புளிப்புடன் இருந்தாலும், அந்த புளிப்பை பொருட்படுத்தாமல் சாப்பிடுவார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் சொல்லவா?

மாங்காயை பச்சையாக கடித்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சாலட் போன்று, செய்து மாலை வேளையில் சாப்பிட்டால், சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த மாங்காயை எப்படி சாலட் செய்வதென்று பார்ப்போமா!!!

raw mango salad
தேவையான பொருட்கள்:

பச்சை மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, இறுதியில் மேலே உப்பு தூவி பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான பச்சை மாங்காய் சாலட் ரெடி!!!