Author Topic: மஸ் குலி போகிபா  (Read 768 times)

Offline kanmani

மஸ் குலி போகிபா
« on: March 01, 2013, 11:49:21 AM »

    ஸ்மோக்டு டூனா மீன் - ஒரு துண்டு
    வெங்காயம் - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிது
    கிதியோ மிருஸ் - ஒன்று
    எலுமிச்சை - ஒன்று
    இஞ்சி - ஒரு துண்டு
    உப்பு
    மஞ்சள் தூள் - சிறிது
    எண்ணெய் - சிறிது
    தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
    புழுங்கல் அரிசி - ஒரு கப்

 

 
   

டூனா மீனை சுத்தம் செய்து பொடிக்கவும்.
   

மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் சேர்த்து பிசையவும்.
   

பொடியாக நறுக்கிய மிருஸ், கறிவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து கொள்ளவும்.
   

இதில் துருவிய தேங்காய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
   

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து, மீனுடன் சேர்க்கவும். (அரிசி மாவு நீர்க்கவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது).
   

பின் நன்கு பிசைந்து கொள்ளவும்.
   

தவாவில் எண்ணெய் தடவி கலவையை பரப்பி தட்டி விடவும்.
   

தவாவை மூடி சிறுந்தீயில் வைத்து வேக விடவும். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி விட்டு மீண்டும் வேக விடவும்.
   

இரண்டு பக்கமும் சிவந்து உள்ளே விட்ட டூத் பிக் சுத்தமாக வெளியே வரும் போது எடுத்து விடவும். சுவையான மஸ் குலி போகிபா தயார்.

 ....

இது மாலத்தீவின் பிரபலமான உணவு வகை. மஸ் - மீன். குலி - காரம். போகிபா - கேக். கிதியோ மிருஸ் இல்லாதவர்கள் பச்சை மிளகாயைப் பயன்படுத்தலாம்.