Author Topic: பாப்கார்ன் சிக்கன்  (Read 722 times)

Offline kanmani

பாப்கார்ன் சிக்கன்
« on: February 25, 2013, 10:43:07 PM »

    சிக்கன் - கால் கிலோ
    மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மிளகாய் பொடி - தேவைக்கு
    சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு
    மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
    முட்டை - ஒன்று
    மைதா மாவு - கைப்பிடியளவு
    காரன் மாவு - கைப்பிடியளவு
    

எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் காரன் மாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.
   

பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
   

நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.
   

பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும்.
   

அதனை முட்டையில் முக்கி எடுக்கவும்.
   

பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்.
   

பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.