பீட்ரூட் - 2
வெங்காயம் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
எண்ணெய்
பீட்ரூட்டை தோல் நீக்கி சீவிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போட்டு தாளித்து, சீரகம், தனியா, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்.
பின்பு உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும்.
வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
பீட்ரூட் சட்னி தயார். சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
இச்சட்னியை இட்லி மாவுடன் கலந்து, தோசை, பணியாரம், இட்லியாகவும் செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்புவர்.