Author Topic: கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் பண்ணுங்க...  (Read 755 times)

Offline kanmani

கற்றாழை சரும பராமரிப்பில் எந்த அளவு பயனுள்ளதாக உள்ளது என்று நன்கு தெரியும். அத்தகைய சிறிய அபூர்வமான செடியில் அழகுப் பராமரிப்பில் மட்டும் பயன்படுவதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இந்த செடி கூந்தல் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதிலும் இந்த கற்றாழையை வைத்து நிறைய அழகுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான முகப்பருவை நீக்குவதற்கு, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் போதுமானது. அதேப் போல், இதனை வைத்து ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், சருமம் நன்கு பட்டுப் போன்று மின்னும். ஏனெனில் இது ஒரு சிறந்த மாய்ச்சுரைசர்.

 இந்த மாய்ச்சுரைசரானது சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் தான். கற்றாழையில் கூந்தலுக்கு ஏற்ற நிறைய நன்மைகள் உள்ளன. அதாவது பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை சரிசெய்ய சிறந்ததாக உள்ளது. இப்போது இந்த கற்றாழை எந்த மாதிரியான கூந்தல் பிரச்சனையை சரிசெய்கிறது என்று பார்ப்போமா!!!


Offline kanmani

கூந்தல் உதிர்தல்

கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அது கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் பெரும் உதவியாக உள்ளது. அதற்கு தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவுடன், சற்று அதிகமாக கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கூந்தலுக்கு தடவி குளித்தால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

கண்டிஷனர்

கூந்தலுக்கு தட்வும் கெமிக்கல் கலந்த கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால், கெமிக்கலால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கலாம். அதற்கு கற்றாழையின் ஜெல்லை தலைக்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் அலசினால், தலைக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

வழுக்கை

 கூந்தல் உதிர்ந்து வழுக்கை ஆவது போல் உள்ளதா? அப்படியெனில் அந்த கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அங்கு கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

மாய்ச்சுரைசர்

 கூந்தலில் உள்ள வறட்சியை நீக்கி, கூந்தலை பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, கற்றாழையின் ஜெல்லை பயன்படுத்த வேண்டும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால்,அப்போது அதனை நீக்குவதற்கு எளிமையான வழி கற்றாழை ஜெல் தான். அதற்கு கற்றாழையின் ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி, 40-60 நிமிடம் ஊற வைத்து, குளிக்க வேண்டும்

தலையில் உள்ள பிம்பிள்

தலையில் பிம்பிள் வந்தால், அதனால் ஏற்படும் வலியைத் தாங்கவே முடியாது. எனவே அத்தகைய பிம்பிளைப் போக்குவதற்கு, கற்றாழையின் ஜெல் சிறந்ததாக இருக்கும்.

முன் வழுக்கை

நிறைய மக்களுக்கு முன்னால் தான் வழுக்கை ஏற்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிள் அல்லது பருக்கள் போன்றவை உடைந்து, அதில் உள்ள நீர்மம் நெற்றில் பரவி, அவை தலையின் முன்புறம் வலுக்கையை உண்டாக்கிவிடும். எனவே அத்தகைய கூந்தல் மற்றும் சருமப் பிரச்சனையைப் போக்குவற்கு கற்றாழை ஜெல் சிறப்பானதாக உள்ளது.