பத்துமாத கருவறையில் சுமந்து பாசம்
ஊட்டி வளர்த்தால் அன்னை,
பக்குவம் வரும்வரை மார்பில் சுமந்து
என் பண்பை ஊட்டி வளர்த்தான் என் தந்தை,
நான் உலகில் உதிராதபோதே முகம்
அறியா, அகம் அறியா, குரல் அறியா,
குணம் அறியாமல் காதலித்த முதல்
ஆடவன் அவனாகத்தான் இருப்பான்,
ஆசையாய் அரவணைப்பான், என்னோடு
அனுதினமும் விளையாடி மகிழ்வான்,
ஆமைநடைபோட தூணாய் இருந்தான்,
அன்பை பொழிவதில் மாரியாய் இருந்தான்,
அறிவைப் பொழிவதில் சூரியனாய் இருந்தான்,
படித்துவிட்டேன் பிதற்றிக்கொள்கிறேன் இன்று,
என் தலையில் நீ வீசிய கூழாங்கற்க்களின் வகிடு,
செம்மண் மேட்டில் தேய்ந்த என் கால் முட்டி,
முதுகில் பதிந்த ஐந்து விரல்கள் சொல்லும்
படிப்பின் வாசனையை நுகரச் செய்தவன் நீதான் என்று,
என் ஒன்பது வயதில், நீ கற்றால் மட்டும் போதுமா
உலகைக்காக்கும் ஆண்டவன் கற்க்க வேண்டாமா
வாழ்க்கைக்கல்வியை, ஆசானாய் சென்றுவிட்டாய்
ஆண்டவனுக்கு,நினைவுகளில் மட்டும் துயில்
கொள்கிறாய் உனை தேடாத நாளில்லை,
வளர்ந்து உன் வழி நடக்கிறேன், வாழ்வின் முதல்
மயில்கல்லை கடந்துவிட்டேன்,காண நீ இல்லை,
ஊரார் வாய் வழி காண்கிறேன் உன்னை இவன்
மகன் என்று புகழ்ந்து பேசுகையில், என் முதல்
தோழனே உனக்காக சிறிய பரிசாய் தோள்
கொடுக்குறேன் உன் இணைக்கு என் உயிர் உள்ளவரை!!!