இடிச்சக்கா (பலா பிஞ்சு)- 1
மஞ்சள் தூள்- 1/4தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல்- 1/2கப்
மிளகாய் வற்றல்-2
பூண்டு- 1 அல்லது 2 பல்
சீரகம்- 3/4தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 2தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 1 அல்லது 2
கடுகு- 1/2தேக்கரண்டி
உளுந்து- 2தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
சுளை வைக்காத பலாப்பிஞ்சை தோல் நீக்கி துண்டுகளாக்க்கி மஞ்சள் தூள் உப்பு கலந்து குழைந்து விடாமல் வேக வைக்கவும்
வெந்த பலாப்பிஞ்சை தண்ணீர வடித்து விட்டு அம்மிக்கல்லில் வைத்து லேசாக தட்டவும். அல்லது மிக்சியில் ஒரே ஒரு முறை சுற்றி எடுக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பலாப்பிஞ்சை சேர்த்து 2நிமிடங்கள் கிளறவும்.
அரைத்த தேங்காய் கலவை சேர்த்து மேலும் 1நிமிடம் கிளறி இறக்கவும்.
இறக்கும் முன் 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி கிளறினால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
Note:
இடிச்சக்கா என்பது பலாப்பிஞ்சு. உள்ளே சுளை கொட்டை என எதுவுமே வராமல் வெறும் நார் நாராக இருக்கும் போதே பறித்து இந்த சமையலுக்கு பயன்படுத்துவார்கள். குமரி மாவட்டத்தில் பிரபலமான சமையல் குறிப்பு இது.