Author Topic: மின்ட் எக் ஆம்லெட்  (Read 776 times)

Offline kanmani

மின்ட் எக் ஆம்லெட்
« on: February 21, 2013, 01:26:34 PM »

    முட்டை- 4
    மல்லித்தழை- 1/2கைப்பிடி அளவு
    புதினா- 25 இலைகள்
    இஞ்சிபூண்டு விழுது- 1தேக்கரண்டி
    வெங்காயம்- 2
    தக்காளி- 1 சிறியது
    பச்சை மிளகாய்- 2 அல்லது 3
    மஞ்சள்தூள்- 1/4தேக்கரண்டி
    வெண்ணெய்- 1தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
    எண்ணெய்- தேவையான அளவு
    உப்பு- தேவையான அளவு

 

    ஒரு முட்டையுடன் இஞ்சிபூண்டு விழுது, மல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, 1தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
    வெங்காயம், தக்காளியை பொடியாக வெட்டி அதனுடன் முட்டை கலவை, மீதமுள்ள முட்டை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
    தோசை தவாவில் ஆம்லெட்டுகளாக ஊற்றி எடுக்கவும்.
    புதினா மணத்துடன் சுவையான ஆம்லெட் தயார்.