Author Topic: வெஜ் பிரிஞ்சி  (Read 766 times)

Offline kanmani

  • FTC Team
  • Classic Member
  • ***
  • Posts: 12428
  • Karma: +1/-0
  • Gender: Female
வெஜ் பிரிஞ்சி
« on: February 21, 2013, 01:25:21 PM »

    பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
    பச்சை மிளகாய் - 3
    தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி கலவை - 200 கிராம்
    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
    பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 3
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    தேங்காய் பால் - 2 கப்
    நெய் - 4 தேக்கரண்டி
    எண்ணெய் - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

 

 
   

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை களைந்து ஊற வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸை ஒரு இன்ச் அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
   

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
   

வதங்கியதும் தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
   

மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
   

ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.
   

பின் தேங்காய் பால் ஊற்றி, கொதி வரும் போது நெய் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
   

சுவையான வெஜ் பிரிஞ்சி தயார். தயிர் பச்சடி, முட்டையுடன் சேர்த்து பரிமாறவும்.