Author Topic: நின் நினைவுகளின் நிழல்கள் - பகுதி 1  (Read 462 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

நின் நினைவுகளின் நிழல்கள் - பகுதி 1

காதல் ( கடவுள் )வாழ்த்து

எந்தப்பள்ளியிலும் ,கல்லூரியிலும் பயிலாமலே
பட்டம் பெறும் அளவு, ஞானம் தரும்
போதி மரம் - காதல்
**************************************************************
தெய்வத்தின் மீது அணுஅளவும் கூட
ஆரம்பத்திலிருந்தே அபிமானமற்றவன்
அங்குலம் அங்குலமாய் தெய்வீகத்தை
அனுஷ்டித்து அனுபவிக்கின்றேன்
தெய்வாதீனமாய் எனக்கு கிட்டிய
அழகு தேவதை உன்னால் .......
தேவதைகள் உண்மை எனும்பட்சம்
தெய்வங்களும் உண்மை என்றுஒப்புக்கொள்கிறேன்
ஒப்பில்லா தேவதை உன்னால் ......
*********************************************************************
பொங்கும் இன்பத்தினை பகிர்ந்திட
பதமாய் படைக்கப்படும்
பால் பாயாசத்திற்க்கு
வாசம் கூட்டிடும் பொருட்டு
தூவிடும் பட்டையும், இலவுங்கமும் போல
நின் நினைவழகை பகிர்ந்திட
பதிப்பாய் படைக்கப்படும்
ஒவ்வோர் கவிதைக்கும்
சுவாசம் ஊட்டிடும் பொருட்டு
உன்னையும் ,உன் கொஞ்சும்நினைவுகளையும்
தூவிடுகிறேன் ....
*********************************************************