நான் பார்த்தபோது
நீ பார்க்கவில்லை.
இன்று நீ பார்க்கிறாய்
என் விழியில்
பார்வையில்லை
நான் அழைத்தபோது
நீ கேட்கவில்லை..
இன்று நீ அழைக்கிறாய்
என் செவியில்
சப்தமில்லை.
நான் சொன்னபோது
நீ ஏற்கவில்லை.
இன்று நீ எதிர்பார்க்கிறாய்
என் இதழில்
மொழியில்லை
நான் தொட்டபோது
நீ உடன்படவில்லை..
இன்று நீ தொடுகிறாய்
என் உடலில்
உணர்வில்லை..