நீ இல்லாத நேரங்களில்
மெளனமான பொழுதுகளில்தான்
மனம் ஒரு குழந்தையைப்போல விழிக்கிறது
பூக்களிலிருந்து பரவும் வாசம் போல
அத்துமீறி என்னை ஆக்கிரமிக்கிறது...காதல்
ஒரு குழந்தையைப் போல...முரண்டு பிடித்து
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளை என்னுள் கொட்டி
மார்கழி குளிராய் மனது நிறைக்கிறது
கரை தொடும் அலைகள் போல
ஒவ்வொரு நினைவும்
தவணை முறையில்
நெஞ்சம் நனைக்கின்றன
ஒவ்வொரு நிமிடத்தையும்
நகர வைத்து
உன்னைவிட்டு நகர மறுக்கிறது மனது!
நீ இல்லாத நேரங்களில் தான்
உன் நினைவு அதிகமாயிருக்கிறது
இன்னும் சொல்லப்போனால்
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது