வீதியோரம் கால் கடுக்க நான் காத்திருக்க...!
வசந்தகால தென்றலாய் நீ என்னை கடக்க...!
ஒழிந்திருந்து உனை உற்று நோக்கிய தருணங்கள்
இன்று என் வாழ்வில் வெறும் நினைவுகளாய் மட்டுமே
பகிர்ந்து கொள்ள நீ இல்லாமல்........
உன்னை கண்ட நொடியிலயே தொலைந்த
என் உயிரை தொலைதூரம் சென்று தேடுகிறேன்
தொலைந்த இடத்தை விட்டு விட்டு.
என் அன்பே நீ தான் என் உலகமே..!
எவ்வளவு சோகங்கள் வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்..
நீ உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அன்பே நான் உன்னை பிரியாமல் இருக்க
வரம் ஒன்று வேண்டும்.....