Author Topic: வாழ்கையில் சிறந்த சில நிமிடங்கள்  (Read 1076 times)

Offline Bommi

1)    முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்

2)    தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்

3)    பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்

 4)   என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்

 5)   நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்

 6)   நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்

7)    காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்

8)    நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டிபுடி வைத்யம்

9)    தன்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்

10)    மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.

11)    தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!

Offline User

ellaa nimidangalum sirandhathu thaan..andha andha kaala kattathuku yethaarpola sila visayangalai kuduthu irukkeenga..nice one..
:)