Author Topic: ~ நா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ல் உ‌ண்டு மரு‌த்துவ‌ம் ~  (Read 834 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226395
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ல் உ‌ண்டு மரு‌த்துவ‌ம்



நா‌ம் சாதாரணமாக சா‌ப்‌பிடு‌ம் எ‌த்தனையோ உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் பல மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை அ‌றி‌ந்து தேவை‌க்கே‌ற்ப சா‌ப்‌பி‌ட்டா‌ல் உணவே மரு‌ந்தாகு‌ம்.

வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.

சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அரு மருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

வாழைப்பழங்களில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற பல வகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இதய அழுத்தம் ஏறாமல் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். அது ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.