Author Topic: காரமான மட்டன் மசாலா  (Read 869 times)

Offline kanmani

காரமான மட்டன் மசாலா
« on: January 29, 2013, 10:21:40 PM »
அசைவ உணவுகளில் மட்டன் உணவுகள் உடலுக்கு குளிர்ச்சியை தரும். அத்தகைய மட்டனை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. ஏனெனில் அந்த அளவு அதன் சுவையும், மணமும் ஆளை இழுக்கும். அதிலும் இதனை பிரியாணி, மசாலா, குழம்பு என்று பலவாறு சமைத்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த மட்டனை வைத்து எப்படி நல்ல காரமான மட்டன் மசாலா செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 4
மிளகு - 6
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்
 கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, மிளகு போட்டு வதக்கி, பின் மட்டன் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, வேக வைத்து இறக்கிய மட்டனை கலவையை ஊற்றி, மசாலா சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு, இறக்க வேண்டும்.

இப்போது நல்ல காரமான மட்டன் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.