Author Topic: நான் யாரென்ற உண்மை………  (Read 1201 times)

arunkumar

  • Guest
நான் யாரென்ற உண்மை………
« on: October 02, 2011, 06:40:05 PM »
என்னைப் பற்றி
என்னென்று சொல்ல?

பெயரை சொன்னால்
அது வெறும்
அடையாளக் குறிப்பாகி போகும்.

ஊரை சொன்னால்
அது வெறும்
விலாசமாகி போகும்.

இன்னார் மகனென்று இட்டுரைத்தால்
அது வெறும்
தலைப்பெழுத்தின் விரிவாக்கமாகி போகும்

பாலினத்தை பகர்ந்தால்
அது வெறும்
மறைத்து வைத்திருக்கும் அவையத்தில்
விழும் வெளிச்சமாகி போகும்

நான் யாரென்ற
உண்மை நானே
உணராத போது

உங்களிடம் நான்
என்னைப் பற்றி பகிர்ந்தால்

நிச்சயமாய்
சொல்கிறேன்
அது வெறும்
பொய்யாகி போகும்!

Offline Global Angel

Re: நான் யாரென்ற உண்மை………
« Reply #1 on: October 02, 2011, 07:27:33 PM »
appo Ulthurai Amachat ilayaa :(