Author Topic: மாஇஞ்சி சாம்பார்  (Read 658 times)

Offline kanmani

மாஇஞ்சி சாம்பார்
« on: January 23, 2013, 10:10:27 AM »

    மாஇஞ்சி -பெரிய துண்டு
    சின்ன வெங்காயம் -1/2 கப்
    தக்காளி-1
    மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
    மல்லித்தூள்-1டேபிள்ஸ்பூன்
    மஞ்சள்த்தூள்-சிட்டிகை
    வெந்தயத்தூள்-சிட்டிகை
    பச்சைமிளகாய்-2
    பாசிப்பருப்பு-1/2 கப்
    உப்பு தேவைக்கு
    பெருங்காயம் -சிறுதுண்டு
    தாளிக்க
    எண்ணை-தேவைக்கு
    கடுகு-1டீஸ்பூன்
    சீரகம்-1டீஸ்பூன்
    காய்ந்தமிளகாய்-1
    கறிவேப்பிலை-1 கீற்று
    கொத்தமல்லித்தழை-ஒரு கொத்து

 
    முதலில் பாசிப்பருப்பை வாசம் வரும்வரை வெறும் வாணலியில் வறுக்கவும்
    சின்னவெங்காயம் தோலுரித்து நீளவாக்கில் நறுக்கவும்
    தக்காளி பொடியாக நறுக்கவும்
    இஞ்சியை தோல் சீவி கால்கப் அளவுக்கு துருவி கொள்ளவும்
    ப்ரஷர் குக்கரில் பருப்பு,வெங்காயம் தக்காளி,இஞ்சித்துருவல் ,பச்சைமிளகாய்
    மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள் மற்றும் கட்டி பெருங்காயம் உப்பு
    தேவையான நீர் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்
    பின் வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,காய்ந்தமிளகாய் சேர்த்து தாளித்து சிட்டிகை வெந்தயத்தூள் சேர்த்து தாளித்து கொட்டவும்
    பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்

Note:

விரும்பினால் தக்காளி தவிர்த்து புளிக்கரைசல் சேர்க்கலாம்.பாசிபருப்புக்கு பதில் துவரம்பருப்பு சேர்க்கலாம் .துவரம்பருப்பு சேர்த்தால் கூடுதலாக ஒரு விசில் வைத்து எடுக்கவும்.இது சாதம் சப்பாத்தி ,பொங்கல்,இட்லி,தோசைக்கு பொருத்தமாக இருக்கும்